பீகாரில் போலி மதுபானத்திற்கு 37 பேர் பலி :ஒரே மாதத்தில் 3 கள்ளச்சாராய பலி சம்பவம்!!

பாட்னா : பீகாரில் போலி மதுபானத்திற்கு ஒரே மாதத்தில் 37 பேர் பலியாகி இருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மதுவிலக்கு தடை அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் போலி மதுபானம் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அங்கு அதிகரித்து உள்ளன. இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக போலி மதுபானத்திற்கு சிலர் உயிரை துறந்துள்ளனர். பக்ஸர் மாவட்டத்தில் உள்ள முரார் என்ற இடத்தில் நேற்று முன் தினம் போலி மதுபானத்தை குடித்த 9 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 6 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மேலும் 3 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மதுபான கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதே போல பீகாரில் நாலந்தா மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி 13 பேரும் சரண் மாவட்டத்தில் 18ம் தேதி 18 பேரும் போலி மதுவிற்கு மாண்டது குறிப்பிடத்தக்கது .

Related Stories: