வான்வெளியில் உள்ள பால்வீதி தொகுப்பில் சுழலும் அசாதாரண பொருள் கண்டுபிடிப்பு

கான்பரா: வான்வெளியில் உள்ள பால்வீதி தொகுப்பில் சுழலும் அசாதாரண பொருள் ஒன்றை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய விண்மீன் தொகுதி மில்கிவே அதாவது பால்வீதி என்றழைக்கப்படுகிறது. இதனை வெறும் கண்களால் பார்க்கும் போது அதில் உள்ள நட்சத்திரங்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்க்க முடியாது என்பதால் இது இரவு வானில் ஒரு வெண் ஒளிப்பட்டை போன்று தோற்றமளிக்கும். பல்வேறு வானிலை அறிஞர்கள் பால்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த பகுதியில் சுழன்று கொண்டிருக்கும் ஒளிரும் பொருள் ஒன்றை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கேர்ட்ன் பல்கலைக்கழகத்தின் மாணவி தைரோன் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து நவீன தொலைநோக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து பதிவு செய்துள்ளார். மாணவி தைரோன் ஐசிஆர்ஏஆர் என அழைக்கப்படும் சர்வதேச வான்வெளி வானியல் ஆராய்ச்சி மையத்தின் அங்கம் ஆவார். பால்வீதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த சுழலும் பொருள் பூமியில் இருந்து 4,000 ஆண்டுகள் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்ப முடியாத அளவிற்கு பிரகாசமான இந்த பொருள் மிகவும் ஆற்றல் மிக்க காந்த புலத்தை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பால்வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுழலும் புதிய பொருள் குறித்த ஆய்வுகளை ஆஸ்திரேலிய விண்வெளி நிபுணர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: