கொரோனா தொற்று காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்வு ரத்து.. பட்ஜெட் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது!!

டெல்லி : வரலாற்று சிறப்பு மிக்க மத்திய பட்ஜெட் இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அல்வா தயாரிப்பு நிகழ்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் வருகின்ற 31ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டே போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில் வழக்கமாக நடைபெறும் அல்வா தயாரிப்பு நிகழ்வு கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நிதி அமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பட்ஜெட் அம்சங்களை பொது மக்கள் இந்த ஆண்டும் பிரத்யேக செயலி மூலமாக தங்களுடைய செல்போன்களில் பார்க்க முடியும். கொரோனா 3வது அலைக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதால் இரு அவைகளும் நாள் தோறும் வெவ்வேறு ஷிபிட்களில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பட்ஜெட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் கூடும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

Related Stories: