புதுச்சேரியில் குடியரசு நாள் விழாவுக்கு கருப்புத்துண்டு அணிந்து சென்ற மதிமுக செயலாளருக்கு அனுமதி மறுப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்த குடியரசு நாள் விழாவில் பங்கேற்க மதிமுக புதுவை மாநில அமைப்பாளர் கபேரியல், அரசின் அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர், கபேரியல் அணிந்திருந்த கருப்புத்துண்டை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அவரை தடுத்துள்ளனர். அப்போது, கபேரியல்,  ‘கருப்புத்துண்டு அணிந்ததால் விழாவுக்கு அனுமதிக்கவில்லை என்று எழுதி தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் நடத்த அவர் முனைந்த பிறகுதான் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்துறையினரின் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன். புதுச்சேரி அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: