நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டி

சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அமமுக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, பொருளாளர் மனோகரன், தலைமை நிலை செயலாளர் உமாதேவன், மண்டல பொறுப்பாளர்கள் கரிகாலன், பார்த்திபன், பாலசுந்தரம், அரூர் முருகன், டேவிட் அண்ணாதுரை, கோமல் அன்பரசு, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பிறகு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமமுக தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடந்து விட்டது. விரைவில் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும், மீண்டும் போட்டியிடுவோம். அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தை தவறானது. தைரியம் இல்லை என சொல்லலாம். வார்த்தைகள் சரியில்லை. அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கின்றனர். அதை குழந்தையை கேட்டாலும்  சொல்லும். அதைதான் நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கலாம்.

Related Stories: