தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம் டிஎஸ்பியாக இருந்த ஜெயராஜ் தாம்பரம் குற்ற ஆவணக்காப்பகம் உதவி கமிஷனராகவும், சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவில் இருந்த ரவிக்குமரன், கேளம்பாக்கம் உதவி கமிஷனராகவும், சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த வெற்றி செழியன் தாம்பரம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை தலைமையிட  பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த ரியாசுதீன், செம்மஞ்சேரி உதவி கமிஷனராகவும், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவில் இருந்த கருணாகரன் தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும்,

செங்கல்பட்டு மாவட்ட வண்டலூர் டிஎஸ்பியாக இருந்த சிங்காரவேலு தாம்பரம் மாநகர கூடுவாஞ்சேரி உதவி கமிஷனராகவும், விழுப்புரம் மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த வெங்கடேசன் அரியலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், வேலூர் மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கண்ணன் சென்னை தலைமையிட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,  செங்கல்பட்டு மாவட்டம் குற்றப்பிரிவில் இருந்த ரவிச்சந்திரன், மணிமங்கலம் உதவி கமிஷனராகவும், சென்னை தலைமை காவல் படை டிஎஸ்பியாக இருந்த சவரிநாதன் தாம்பரம் மாநகர காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், துரைப்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த ரவி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழகம் முழுவதும் மொத்தம் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: