திமுக மாநிலங்களவை எம்பி டாக்டர் கனிமொழிக்கு கொரோனா

சென்னை: திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் கனிமொழிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல் வலியும், காய்ச்சலும் இருந்து வந்தது. இதை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில்,‘கொரோனா தொற்று இருப்பதை அடுத்து என் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னை சந்தித்த அனைவரும் தயவு செய்து தங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: