நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால் அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைதளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.

Related Stories: