ஒரே நாளில் சவரன் ரூ.472 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று சவரனுக்கு ₹472 குறைந்தது. தங்கம் விலை கடந்த 4 மாதத்துக்கும் மேலாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், இந்த சமயத்தில் நகை வாங்கலாமா என்ற ஒரு குழப்பமான நிலை நகை வாங்குவோரிடம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹4,637க்கும், சவரன் ₹37,096க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து சவரன் ₹37 ஆயிரத்தை தாண்டியது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ₹59 குறைந்து ஒரு கிராம் ₹4578க்கும், சவரனுக்கு ₹472 குறைந்து ஒரு சவரன் ₹36,624க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூளும் என்ற சூழல் காரணமாக யூகத்தின் அடிப்படையில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. விலை உயரும் போதே தெரியும். மறுபடியும் விலை குறையும் என்று. அதன் அடிப்படையில் தங்கம் விலை குறைந்துள்ளது. பழைய நிலைக்கு தங்கம் விலை வருமே தவிர, அதில் இருந்து குறைய வாய்ப்பு இல்லை” என்றார்.

Related Stories: