சந்தை விலையில் 30% குறைத்து கார் வாங்கி தருவதாக ரூ.2.15 கோடி மோசடி: பெங்களூரு வாலிபர் சிக்கினார்

சென்னை: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் குமரவடிவேல் என்பவர், சென்னை மாநகர காவல் துறையில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் புட்பால் கிளப் நடத்தி வரும் நவீன் என்பவர் எனக்கு பழக்கமானார். இவர், தனக்கு பிரபல கார் நிறுவனத்தின் புதிய கார்களை மார்க்கெட்டில் விற்பனை செய்யும் விலையை விட 30% குறைத்து தனது கிளப்பிற்கு தர உள்ளனர்.

உங்களுக்கும் அதே விலைக்கு நான் கார்களை வாங்கி தருகிறேன், எனக்கூறினார். அதை நம்பி நானும், எனது நண்பர்களும் சேரந்து, 19 கார்கள் வேண்டும் என்று நிவீன் நடத்தும் கிளப் வங்கி கணக்கில் 2 கோடியே 15 லட்சத்து 88 ஆயிரத்து 656 ரூபாய் அனுப்பி வைத்தோம். ஆனால், கார்கள் வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார், என கூறியிருந்தார்.

போலீசார், விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த நவீன் (31), கார் வாங்கி தருவதாக ₹2.15 கோடி பெற்று தலைமறைவானது தெரியவந்தது. பெங்களூருவில் தலைமறைவாக இருந்த நவீனை போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: