சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் கால்நடை மருத்துவம் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் துவக்கி வைத்தார். முகாமில், கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், சினை தடுப்பூசி, கோமாரி தடுப்பூசி, மடிநோய், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி ஆகிய மருத்துவ பணிகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர், தங்களது கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக கால்நடை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்,வார்டு உறுப்பினர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: