திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் எஸ்கேப்

மதுராந்தகம்: படாளம் காவல் நிலையத்துக்கு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார். இதனால் போலீசாருக்கு பெரும் திணறல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார், காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரா (41) என்பவரை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவரை, 2 நாட்களாக வைத்து விசாரித்தனர். மேலும், விசாரணை செய்வதற்காக அவரை, காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வீரா, காவல் நிலையத்தில் இருந்து நைசாக வெளியேறி தப்பிவிட்டார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்த விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தப்பி ஓடிய சம்பவத்தால் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: