புஷ்பாவில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு, சமந்தா

ஐதராபாத்: புஷ்பா படத்தில் மகேஷ்பாபு, சமந்தா உள்பட 5 நடிகர், நடிகைகள் நடிக்க மறுத்த தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா படம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டானது. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். அவர் முதலில் மகேஷ்பாபுவிடம்தான் இந்த படத்தின் கதையை கூறியிருக்கிறார். நெகட்டிவ் கலந்த ரவுடி கேரக்டர் என்பதால் இதில் நடிக்க மகேஷ்பாபு மறுத்துவிட்டார். அதன் பிறகே அல்லு அர்ஜுன் இதில் நடித்தார். இதேபோல் ஹீரோயின் வேடத்துக்கு முதலில் சமந்தாவை கேட்டிருக்கிறார்கள். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பின்பே ராஷ்மிகா தேர்வானார். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பாலிவுட் நடிகைகள் திஷா பதானி மற்றும் நூரா பதேஹி ஆகியோரை அடுத்தடுத்து கேட்டு, இருவரும் அதிக சம்பளம் கேட்டதால் அவர்களை நிராகரித்துள்ளனர். இதையடுத்து அந்த பாடலில் சமந்தா நடித்தார். இதேபோல் பஹத் பாசில் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசினார்கள். கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியவில்லை.

Related Stories: