500 இடங்களில் 115 அடி உயரத்தில் தேசியக்கொடி: டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் திமார்பூர் தொகுதியில் அமைந்துள்ள டெல்லி பல்கலைக் கழகம் அருகே 115 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘‘75ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் 75 இடங்களில் 115 அடி உயர கொடிமரங்கள் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாகும். அடுத்த சில மாதங்களில் மொத்தமாக இதுபோல் 500 கொடிமரங்கள் அமைக்கப்பட்டு தேசியக்கொடியை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.

Related Stories: