ஆஸி. ஓபன் பைனலில் முதல்முறையாக ஆஷ்லி டேனியலி மோதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாட ஆஷ்லி பார்தி-டேனியலி கொலின்ஸ் ஆகியோர் முதல்முறையாக  தகுதிப் பெற்றுள்ளனர். அங்கு நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்தி(25வயது, 1வது ரேங்க்),  அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்(26வயது, 51வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஆஸி ஓபனில் இருவரும் இதுவரை தலா 2 முறை அரையிறுதி வரை மட்டுமே முன்னேறியுள்ளனர். அதனால் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேற இருவரும் வேகம் காட்டினர். ஆனால் நெம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி ஒரு மணி 2 நிமிடங்களில் 6-1, 6-3 என நேர் செட்களில் மேடிசனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார்.

அதேபோல் 2வது அரையிறுதியில்  அமெரிக்க வீராங்கனை டேனியலி கொலின்ஸ்(28வயது, 30வது ரேங்க்), போலாந்து வீராங்கனை (20வயது, 9வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய டேனியலி  ஒரு மணி 18 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் வென்று முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். இதுவரை தலா 2 முறை ஆஸி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி இருந்த ஆஷ்லி, டேனியலி இருவரும் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளனர். அதனால் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெல்பவர் ஆஸி ஓபனின் புதிய சாம்பியனாக இருப்பார். 

Related Stories: