ரோவ்மன் அதிரடி சதம் வெ.இண்டீஸ் மீண்டும் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் 20ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற வெ.இண்டீஸ் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றுள்ளது. மொத்தம் 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் வெ.இண்டீஸ், இங்கிலாந்து அணிகள், ஆளுக்கொரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இ ருந்தன. இந்நிலையில் நேற்று நடந்த 3வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெ.இண்டீஸ் நிகோலஸ் பூரன் 70(43பந்து, 4பவுண்டரி, 5சிக்சர்), ரோவ்மன் பாவெல் 107(53பந்து, 4பவுண்டரி, 10சிக்சர்) ரன் விளாசியதால் 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 224ரன் குவித்தது.

அதனையடுத்து 225ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தாலும், விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. அதனால் அந்த அணி 20ஓவருக்கு 9 விக்கெட் இழந்து 204ரன் மட்டுமே எடுத்தது. அதனால் வெ.இண்டீஸ் 20 ரன் வித்தியாசத்தில் மீண்டும் வென்றது. அந்த அணியின் ரொமாரியோ 3, பொல்லார்டு 2 விக்கெட் எடு்ததனர். இங்கிலாந்து வீரர்கள் பான்டன் 73(39பந்து, 3பவுண்டரி, 6சிக்சர்), பில் சால்ட் 57(24பந்து, 3பவுண்டரி, 5சிக்சர்) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் வெ.இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த அணிகள் மோதும் 4வது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

Related Stories: