மீண்டும் பாச மகளுடன் பிரயன்ட்

அமெரிக்கா கூடைப்பந்து  உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த கோப் பிரயன்ட் தனது 41வயதில் 2020ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அந்த விபத்தில்  அவரது 13வயது பாச மகள் கியான்னா(கிகி), உறவினர்கள் என மேலும் 8 பேர் இறந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் பிரயன்ட், கிகியுடன் இருக்கும் வெண்கல சிலை  நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுமார் 2கிமீ மேடு பள்ளங்களை நடந்து கடக்க வேண்டியது குறித்து அவரது மனைவி மதீனா, ‘அவரை நேசிக்கும் யாருக்கும் அது  சிரமமாக தெரியாது. காரணம் அவர்களது விருப்பத்ததைதான் நிறைவேற்றி உள்ளேன்’  என்று கூறியுள்ளார்.

Related Stories: