இந்தியா-வெ.இண்டீஸ் தொடர்: அணிகள் அறிவிப்பு

மும்பை: இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு  தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் ஆட்டங்கள் பிப்.6, 9, 11 தேதிகளில் அகமதாபாத்திலும், டி20 ஆட்டங்கள் பிப்.16, 18, 20 தேதிகளில்  கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடர்களில் விளையாட உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து  ஒரு நாள் தொடருக்கான அணியை மட்டும்  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பொல்லார்டு தலைமையிலான ஒருநாள் அணியில்  பிராவோ, புரூக்ஸ், பிராண்டன், ஃபேபியன், நக்ருமா, ஹோல்டர், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்),  பூரன்(விக்ககெட் கீப்பர்),  அகேல், அல்சாரி, கெமர், ரொமாரியோ, ஓடியன் ஸ்மித், வால்ஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ரோகித் தலைமையிலா இந்திய ஒருநாள் அணியில் ருதுராஜ், தவான், கோஹ்லி, சூரியகுமார், ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா,  வாஷிங்டன், ராகுல், ரிஷப்(விக்கெட் கீப்பர்), சாஹர், ஷர்துல், சாஹல், குல்தீப், ரவி பிஷ்னாய், சிராஜ், பிரசித், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தவான், ருதுராஜ், ஹூடா, குல்தீப், பிரசித் ஆகியோருக்கு பதிலாக, டி20 அணியில் வெங்கடேஷ் அய்யர், அக்சர் படேல், இஷான் கிஷன், புவனேஸ்வர், ஹர்ஷல் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: