அயோத்தியில் ராமர் கோயில் பணி 3ம் கட்டம் துவங்கியது: 17,000 கிரானைட் கற்களில் அடிபீடம்

புதுடெல்லி: அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை 2023ம் ஆண்டு, டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2024 மக்களவை தேர்தலின் மிகப்பெரிய சாதனையாக பாஜ இதை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கோயில் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, அடித்தளம், தரைகள் அமைக்கும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. தற்போது, பிரதான கோயிலை கட்டுவதற்கான அடிபீடம் அமைக்கும் 3ம் கட்ட பணி தொடங்கி உள்ளது. தென் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் 17 ஆயிரம் கிரானைட் கற்கள் இதற்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கற்கள் ஒவ்வொன்றும் 2.5 டன் எடை கொண்டவை. இதை அமைக்கும் பணிகள் வரும் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, இவற்றின் மீது பிரதான கோயிலை கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related Stories: