தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய 2 போலீசார் மீது அரசு நடவடிக்கை

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம், காசர்கோட்டில் மாவட்ட நகரசபை ஸ்டேடியத்தில் நடந்த  விழாவில் துறைமுகம் மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றி வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், பாஜ உள்பட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரிவித்தார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வருவாய் துறை சார்பிலும், மாவட்ட எஸ்பியும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவத்தில், சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், கான்ஸ்டபிள் பிஜு மோன் ஆகியோர் தான் தவறு செய்தததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: