தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் விருப்ப ஓய்வு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக இருந்தவர்  ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தார். அதில், டெல்லி தமிழ்நாடு இல்லங்களின் தலைமை ஆணையர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதில் ஜக்மோகன் சிங் கோரிக்கை ஏற்கப்பட்டு நேற்றுடன் அவர் ஓய்வுபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவரது பதவிக்காலம் ஓராண்டு மூன்று மாதங்கள் நிலுவையில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வை அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விரைவில் டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு புதிய தலைமை ஆணையர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

Related Stories: