தெரு குழந்தைகள் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் தங்குவதற்கு உறைவிடமின்றி தெருச் சூழலில் வசிக்கும் குழந்தைகளின் அவலநிலை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிந்த வழக்கானது தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்குவதற்கு இடமில்லாமல் தெருச் சூழலில் வசிக்கும் குழந்தைகளை அடையாள கண்டு அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும் அதுசார்ந்த நடைமுறைகளை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக முடிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: