இளைஞர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு இளைஞர் சங்க மாநில தலைவர் எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை:முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு அரசு சார்பில் கிண்டி அண்ணா பல்கலை வளாகம் முன்பு சிலை வைக்க அனுமதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். மேலும் தமிழகத்தில் பல்வேறு நல வாரியங்கள் உள்ளன. எனவே, இளைஞர் நலம் வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

Related Stories: