மாணவி தற்கொலை விவகாரம் 4 பேர் கொண்ட குழு அமைப்பு: பாஜ தேசிய தலைவர் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைத்து பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினரால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அதன்படி மத்தியபிரதேச எம்.பி சந்தியா ராய், தெலங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகனந்தா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: