4 வயது சிறுவன் அடித்துக்கொலை மனநிலை பாதித்த இளம்பெண் கைது

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (40), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி. மகள் அபிநயா (6), மகன் அஷ்வின் (4 ). நேற்று மாலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அஷ்வினை காணவில்லை. இதனால் அதிரச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர். இரவு முழுவதும்தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்றிரவு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் செந்தில்நாதன் புகார் கொடுத்தார். போலீசார் பல இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவிலலை.இந்நிலையில் இன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பில் ஒரு மரத்தின் அடியில் தலையில் பலத்த காயத்துடன் அஷ்வின் இறந்து கிடந்தான்.

இதுபற்றி அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (20) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட ரஞ்சிதா தான்  சிறுவன் அஷ்வினை மரத்தில் அடித்துக்கொன்றதாக தெரியவந்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இளம்பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: