×

பேரீட்சை நட் கேக்

செய்முறை:

ஒரு கப் சுடு தண்ணீரில் பேரீட்சையை பேக்கிங் சோடா சேர்த்து ஒரு இரவு ஊற விடவும். சர்க்கரையையும், வெண்ணெயையும் நுரைக்க அடிக்கவும். அதனுடன் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும். எசென்சும் சேர்க்கவும். பேரீட்சையுடன் கொக்கோ பவுடர், முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து சலித்த மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து 6 இன்ச் வட்ட அலுமினிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கேக் கலவையை போட்டு 1800C சூட்டில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி