பறவைகள் கணக்கெடுப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை உத்தரவு

சென்னை: பறவைகள் கணக்கெடுப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு பறவைகள் வரும். பறவைகளில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு ஜனவரி 28 மற்றும் 29ம் தேதி கண்கெடுப்பை நடத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தன்னார்வலர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுற்றுச் சூழல் நிபுணர்கள் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும். கணக்கெடுப்பு பணி முடிந்த பின் கண்காணிப்பு அதிகாரியிடம் முறையாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: