புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச உயரிய TX-2 விருதுக்கு தேர்வு.!

சென்னை: உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச உயரிய விருது (TX 2) அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2013-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30 புலிகள் மட்டுமே இருந்தன.

ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு கன்சர்வேஷன் அண்டு டைகர் உள்ளிட்ட 13 அமைப்புகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வமைப்பு, பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய நாடுகளுக்கு TX 2 எனும் உயரிய விருதை வழங்கி வருகின்றது.

அதன்படி, சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, TX 2 விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது காணொளி மூலம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருதான TX 2 விருது அறிவிக்கப்படுள்ளமைக்கு, சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: