ஐபிஎல் வீரர்கள் ஏலம் எங்கே?..நீடிக்கும் குழப்பம்

பெங்களூரு: 15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் பொது ஏலம் பிப்.12, 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல் வெளியானது. ஏலத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஏலத்திற்கான இடத்தை பிசிசிஐ இன்னும் இறுதி செய்யவில்லை. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஐபிஎல் ஏலத்தை பெங்களூருக்கு வெளியே மாற்றலாமா அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாமா என்பது குறித்து வாரியம் இன்னும் குழப்பத்தில் உள்ளது

இதுபற்றி ஐபிஎல் அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஏலம் எங்கு நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இதில் நாங்கள் குழப்பத்தில் உள்ளோம். 10 நாட்களுக்கு முன்பு, ஏலம் நடைபெறும் இடம் விரைவில் முடிவாகும் என்று எங்களிடம் கூறப்பட்டது, அதனால் நாங்கள் காத்திருக்கிறோம், என்றார். பெங்களூருவுக்கு பதிலாக ஒருவேளை மும்பையில் ஏலம்நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: