புதுச்சேரி மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன், குட்கா கடத்தல்: இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள விக்னேஷ் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக பாஜக இளைஞர் அணி செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு இரட்டை கொலை வழக்கில் கைதாகி விசாரணைக் கைதியாக புதுச்சேரி பாஜக மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட 250- க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நேற்று மத்திய சிறைச்சாலையில் விழா நடைபெற்றது. அப்போது சிறைக்குள் சாமியானா பந்தல் அமைக்க வந்த வாகனத்தில் 0.25 கிலோ கஞ்சா, 4 செல்போன், 1 சிம்கார்ட், 4 கட்டுப்பீடு, 10 பாக்கெட் குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

வாகன ஓட்டுநர் பாஸ்கரிடம் சிறை போலீசார் விசாரணை நடத்தியதில், மத்திய சிறைக்குள் விசாரணை கைதியாக உள்ள புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் எடுத்து வரச் சொன்னதாக கூறியுள்ளார். இதையடுத்து பறிமுதல் செய்த பொருட்களை காலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறைத்துறை எஸ்.பி. கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில் ஓட்டுநர் பாஸ்கர், பாஜக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.          

Related Stories: