ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது ஒன்றிய அரசு

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு ஒப்படைத்தது. கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமம் வாங்கியது. ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும் எஞ்சிய ரூ.15,300 கோடியை ஏர் இந்தியா கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் ஒப்பந்தம் செய்தது. டெல்லியில் பிரதமர் மோடியுடன் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் சந்திப்புக்கு பின் ஏர் இந்தியா கைமாறியது.

Related Stories: