கிரிக்கெட் வீரர் கருணால் பாண்டியாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

மும்பை: கிரிக்கெட் வீரர் கருணால் பாண்டியாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கருணால் பாண்டியாவின் டுவிட்டர் கணக்கு இன்று காலை 7.31 மணிக்கு ஹேக் செய்யப்பட்டது. சைபர் கிரைம் குற்றவாளிகளான ஹேக்கர்கள் சிலர் அவரது கணக்கை முடக்கி வைத்துள்ளனர். கருணால் பாண்டியாவின் டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு டுவிட்டை ரீடுவிட் செய்த ஹேக்கர், 2 நிமிடங்களுக்குப் பிறகு பயனர் ஒருவக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை கருணால் பாண்டியாவின் கணக்கில் கிட்டத்தட்ட 10 டுவிட்களை ஹேக்கர்கள் செய்துள்ளனர். பிட்காயின் விற்க தயாராக இருப்பதாகவும் ஹேக்கர் பதிவிட்டுள்ளார். கருணாலின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல கிரிக்கெட் வீரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: