×

உக்ரைனுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வருமா அமெரிக்கா?: பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கு எழுத்துப்பூர்வ இசைவு..!!

வாஷிங்டன்: உக்ரைனுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இசைவு தெரிவித்துள்ளது. அண்டை நாடான உக்ரைனுக்கு எதிராக கருங்கடல் அருகே 1 லட்சம் திருப்புகளை ரஷ்யா குவித்திருப்பது போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. 2ம் உலக போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மோதலாக ரஷ்யா- உக்ரைன் பிரச்னை மாறி வருகிறது. திருப்புகளை திரும்ப பெறுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை. இதனால் ரஷ்யாவின் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த எழுத்து பூர்வமாக அமெரிக்கா இசைவு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிருமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து தனதாக்கிக் கொண்டது.

அது முதல் தற்போது வரை இரு நாட்டிற்கும் மோதல் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், எந்த சூழலிலும் நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைனை அமெரிக்கா சேர்த்துவிடக்கூடாது என்பது ரஷ்யாவின் முக்கிய நிபந்தனையாகும். நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் சேர்ந்தால், ரஷ்யாவிற்கு மிக அருகில் எப்போது வேண்டுமானாலும் நேட்டோ படைகள் நிறுத்தப்படலாம். ஆனால் ரஷ்யாவின் இந்த நிபந்தனையை அமெரிக்கா ஏற்காது என்றே தெரிகிறது. இதனிடையே ரஷ்ய அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் தடைவிதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருகிறார். இது புதினை ஒன்றும் செய்யாது என்று கூறியுள்ள மாஸ்கோ, அரசியல் ரீதியாக இது அழிவை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளது.


Tags : United States ,Ukraine , Ukraine, conflict, US, negotiations
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து