திருப்பூரில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை

திருப்பூர்: அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 7 பேரை தாக்கி போக்கு காட்டி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தியதால் புதருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் வனத்துறை பிடித்தது.

சிறுத்தைக்கு கடந்த 20 நிமிடங்களுக்கு முன்னதாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தற்போது சிறுத்தையானது முழுவதுமாக மயக்கமடைந்த நிலையில் உள்ளது. மயக்கமடைந்துள்ள சிறுத்தை கூண்டு அமைக்கப்பட்டு வண்டியில் ஏற்றி செல்ல உள்ளனர். சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிடப்படும். உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: