மெயினருவி, ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்த மக்கள்

தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு காணப்பட்டது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் பாறையை ஓட்டினார் போன்று சிறிதளவு தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் ஒரு பிரிவிலும், ஆண்கள் பகுதியில் ஒரு பிரிவிலும் சுமாராக தண்ணீர் விழுகிறது.

பழைய குற்றால அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சபரிமலை ஐயப்ப சீசன் காரணமாக பக்தர்களின் வருகை அதிகமாக இந்த நிலையில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்தது. குறைவான தண்ணீர் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்ட நிலையில் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு நேற்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.

Related Stories: