ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் : தமிழக போக்குவரத்துத் துறை

சென்னை : மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர், நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

1. ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்;  பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை உபசரிப்புடனும் அன்புடனும்  நடத்த வேண்டும்

 

2.மாற்றுத் திறனாளி பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது முறையாக பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

3. பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத் திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.

4.மாற்றுத்திறனாளிகளிடம் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

5.அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இல்லாமல் பயணிக்க நடத்துனர் உதவ வேண்டும்.

6. மாற்றுத் திறனாளிகள் அவர்களது இருக்கையில் அமரவும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஏறவும் உதவ வேண்டும்.

7. சாதாரண கட்டண பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கலாம்.

8.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

Related Stories: