மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கும் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கும், கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கும் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும், கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு 30 சதவீத ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி தண்டபாணி, தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் அடிப்படையில், கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

அதேபோல் பொதுப்பிரிவிலும் இவர்கள் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் பரேஷ் உபாத்யாயா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை தொடர வேண்டும் என்றும் அரசு முடிவை எதிர்த்து எதிர்காலத்தில் வழக்கு தொடரலாம் என்றும் மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: