தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: இன்று விசாரணை ஆணையத்தில் முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் ஆஜர்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் 35ஆம் கட்ட விசாரணை மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆஜராகியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தின் 35ஆம் கட்ட விசாரணை கடந்த 24ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 29ஆம் தேதிவரை 5 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணைக்காக மொத்தம் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த தென்மண்டல ஐ.ஜி மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி, அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த மகேந்திரன் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட 6 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் ஏற்கனவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவே 35ஆம் கட்ட விசாரணைக்காக முன்னாள் தென்மண்டல ஐ.ஜி மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி உட்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 35ஆம் கட்ட விசாரணையின் 3ஆம் நாள் விசாரணைக்காக, 2018ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற போது தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரனுக்கு இன்று 3ஆம் நாள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இன்னும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஆணையம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணைக்காக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை இருப்பதாக ஆணையம் தரப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 36ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராகும் படி மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: