சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு : வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என கணிப்பு!!

டெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை உயர்வை கண்டுள்ளது. கொரோனா 2ம் அலைக்கு பிறகு கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக இன்னும் சீரடையாத நிலையில், ரஷியா, உக்ரைன் போர் பதற்றத்தால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவத்தை குவித்து வைத்து இருப்பதால் ரஷியாவில் இருந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தின.

பிரென் கச்சா எண்ணெய் 2% உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 6756 ரூபாய் வரை சென்றது. இது 2014ம் ஆண்டுக்கு பிறகு காணப்பட்ட அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு சற்று குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 7717 ரூபாய்க்கு விற்பனையாகிறது. லூசியானா லைட் எண்ணெய் 6700 ரூபாய் அதிகமாகவும் வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மிடியேட் எண்ணெய் 6500 ருபாய்க்கு அதிகமாகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், விநியோக சங்கிலியில் இடர்பாடுகள் பெருகி வருவது விலை ஏற்றத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: