மாணவர்கள் சேர்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

திருவள்ளூர்: மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் தனஞ்செயன், மகாதேவன், பாலுமகேந்திரன், குமார், ரமணய்யா, பிரவீன், டி.ஸ்டீபன் சற்குணர், ஷிபா, மு.மகாலட்சுமி, பால்ராஜ் ரவி, மோகன் பாபு, காபிரியல், கோவர்த்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் மாவட்ட பொருளாளராக லோகய்யா, கல்வி மாவட்ட செயலாளராக எபிநேசர், கல்வி மாவட்ட தலைவராக சீனிவாசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் 2009க்கு பின்னர் பணியேற்றவர் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். பள்ளிப்பட்டு வட்டத்தில் தெலுங்கு, தமிழ் ஒருங்கிணைந்த பட்டியலின் படி பதவி உயர்வு நீதிமன்ற ஆணைபடி வழங்க வேண்டும்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெளிப்பட ஆசிரியர் உயர் கல்வி பயின்றோருக்கு ஊக்க ஊதியம் உயர்வு, பழைய படி வழங்க வேண்டும். பள்ளிப்பட்டு வட்டாரத்தில் தெலுங்கு தமிழ் ஒருங்கிணைந்த பட்டியலின்படி நீதிமன்ற ஆணைபடி பதவி உயர்வு அளிக்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: