வைரக்கல் திருட்டால் 30 ஆண்டு பகை தாய்லாந்தை மன்னித்தது சவுதி

துபாய்: நீல வைரக்கல் விவகாரத்தினால் 1989ம் ஆண்டில் இருந்து, கடந்த 30 ஆண்டுகளாக பாதித்துள்ள சவுதி, தாய்லாந்து இடையேயான நட்புறவு, தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஒச்சாவின் சவுதி வருகையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமர் பிரயூத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பழைய பகைமையை மறந்து, இரு நாடுகளின் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஒப்புக் கொண்டதாக சவுதி அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சவுதி இளவரசரின் அரண்மனையில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த வாயிற்காவலர் அங்கிருந்து ரூ.150 கோடி மதிப்பிலான 50 காரட் நீல வைரக்கல்லை கொள்ளையடித்து சென்ற பிறகு, தாய்லாந்து நாட்டினருக்கு விசா வழங்குவது, தாய்லாந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனித யாத்திரை வருவது ஆகியவற்றை சவுதி அரசு தடை செய்திருந்தது. வைரக்கல்லை திரும்பி தரக் கோரிக்கை விடுத்த 3 சவுதி அரசு அதிகாரிகள் பாங்காக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை யாரும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்காக கைது கூட செய்யப்படவில்லை. தற்போது இந்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ள தாய்லாந்து அரசு, 1989-90ம் ஆண்டுகளில் நடந்த இந்த கொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

Related Stories: