தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு

ஜெனீவா: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதங்களுக்கு இடையே `மக்களின் பாதுகாப்பு, நகரங்களில் போர்- நகர்ப்புற அமைப்புகளில் மக்களின் பாதுகாப்பு’ என்ற விவாதம் நடந்தது. இதில், முதலில் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதர் முனீர் அக்ரம் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தூண்டும் வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர ஆலோசகர் மதுசூதன், `தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு, நிதி, இடம் அளித்தலில் பாகிஸ்தான் வரலாறு படைத்திருப்பதை உறுப்பினர் நாடுகள் நன்கு அறியும். உலகின் எந்த மூலையில் தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதற்கு பூர்வீகம் உள்ளது. அந்த வகையில், உலகில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கும்,’ என்று பதிலடி கொடுத்தார்.

Related Stories: