தெலுங்கில் அறிமுகம் ஆகிறார் ஜான்வி கபூர்

ஐதராபாத்: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தியில் நடித்து வருகிறார். இவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் அழைத்தும், வர மறுத்துவிட்டார். இப்போது லைகர் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் புரி ஜெகன்னாத். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கிறார்கள். இந்த படத்தையடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை புரி ஜெகன்னாத் இயக்க உள்ளார். இந்த படமும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இதில் நடிக்க ஜான்வி கபூரிடம் புரி ஜெகன்னாத் பேசியிருக்கிறார். அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Related Stories: