நீண்ட நேரம் உயிருடன் இருக்கும் ஒமிக்ரான் தோலில் 21 மணி நேரம் பிளாஸ்டிக் மீது 8 நாள்

புதுடெல்லி: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக ஜப்பானின் கியோட்டோ மருத்துவ பல்கலைக் கழகம், வுகானில் முதன் முதலில் உருவான சார்ஸ்-2, உருமாறிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து ஆய்வு செய்தது. இதில், ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை வைரஸ்கள் வுகான் வைரசை காட்டிலும் பிளாஸ்டிக், மனிதனின் தோல் மேற்பரப்புகளில் 2 மடங்கு நீண்ட நேரம் உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஒமிக்ரான் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் மீது 8 நாட்களுக்கும், மனிதர்களின் தோலில் 21.1 மணி நேரமும் அது உயிருடன் இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பரப்புகளில் சார்ஸ்-2 வைரஸ் 56 மணி நேரம், ஆல்பா 193.3 மணி நேரம், பீட்டா 156.6, காமா 59.3, டெல்டா திரிபுகள் 114 மணி நேரமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆனால், ஒமிக்ரான் 193.4 மணி நேரம் அதாவது 8 நாட்களுக்கும் மேல் உயிருடன் இருக்கிறது. மனித தோல் பரப்பில் சார்ஸ்-2 வைரஸ் 8.6 மணி நேரமும், ஆல்பா 19.6 மணி நேரம், பீட்டா 19.1 மணி நேரம், காமா 11 மணி நேரம், டெல்டா 16.8 மணி நேரமும் உயிருடன் இருக்கின்றன. ஒமிக்ரான் 21.1 மணி நேரம் உயிருடன் இருக்கிறது. எனவே தான், தற்போதைய தொற்றை கட்டுப்படுத்த கைகளை அடிக்கடி கழுவும்படியும், சானிடைசர் பயன்படுத்தும்படியும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

Related Stories: