சீரக சென்னா ரைஸ்

செய்முறை:

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். வேக வைத்த சுண்டலை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று ஓட விடவும். அரைபட்ட சென்னாவை வதக்கிய கலவையுடன் சேர்த்து வதக்கவும்.  போதுமான உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதனுடன் வடித்த சாதத்தைச் சேர்த்து உதிரியாய் நன்கு பிரட்டவும். சுவையான சீரக சென்னா ரைஸ் தயார்.

குறிப்பு

* வௌ்ளைச் சுண்டலை விட கருப்புச் சுண்டலில் சத்துக்கள் அதிகம்.
* காராமணி, சோயா, பச்சைபயறு, டபுள் பீன்ஸ், வேர்க்கடலை கொண்டும் இந்த ரெசிபியைச் செய்யலாம்.

Tags :
× RELATED Tomato Soup