ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு அணிவகுப்பு வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டதையும், ஒன்றிய அரசின் மாநில  விரோத செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு தேசிய கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த  நிர்வாகிகள் வீரபாண்டியன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை ஏற்றிய பின்பு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்தும் ஒன்றிய அரசின் மாநில விரோத செயலை கண்டித்து கட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: