×

நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி வழக்கு தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: 2020 நீட் தேர்வு முடிந்த பிறகு அக்டோபர் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில், அக்டோபர் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண்பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டது எனக்கூறி கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சைபர் க்ரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்துமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தேசிய தேர்வு முகமை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திகுமார் அமர்வில் விசாரணைக்கு  வந்தது.

அப்போது, தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகள் மற்றும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 594 மதிப்பெண் என காட்டிய ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்களும் மாணவன் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் தான் மனுதாரர் பலிகடா ஆகியுள்ளார் என்றும் மாணவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எம்.ரவி, பிரியா ஆகியோர் வாதிட்டனர். அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு புலனாய்வு தேவையில்லை. தேசிய தகவல் மையம் (நிக்) இந்த விவகாரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும். அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் ஒன்றிய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது என்று விளக்கம் அளித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று இறுதி தீர்ப்பளித்தனர். அதில், இந்த வழக்கின் பிரதான மனுவை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே, சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில் தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும். மனுதாரர் மாணவன், தொடர்ந்து படிக்கலாம், தொடர்ந்து படிப்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டனர்.

Tags : NEED EXAMINATION SCORE MUCH CASE REVIEW TO THE SPECIAL JUDGE: HIGH COURT SESSION ORDER
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்