குஜிலியம்பாறை அருகே ஊராட்சி நிதி கணக்கில் பல லட்ச ரூபாய் முறைகேடு தணிக்கையில் கண்டுபிடிப்பு: அதிமுக ஊராட்சி தலைவர் விளக்கம் அளிக்க கலெக்டர் உத்தரவு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சியில் நடந்த தணிக்கையின்போது பல லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விசாகன் உத்திரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.கோம்பை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மலர்வண்ணன். குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார். கடந்த 3.1.2022 அன்று ஆர்.கோம்பை ஊராட்சியில் திண்டுக்கல் உதவி இயக்குநர் (தணிக்கை) அன்புமணி, நிகழ் தணிக்கை நடத்தினார்.

ஆவணங்கள், பதிவேடுகளை ஆய்வு நடத்தியதில் ஊராட்சி நிதி கணக்கில்  பல லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆர்.கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் மலர்வண்ணன் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். மனைவி மீது நாளை  நம்பிக்கையில்லா தீர்மானம்? மலர்வண்ணன் மனைவி உமா மகேஸ்வரி குஜிலியம்பாறை ஒன்றிய குழு தலைவராக (அதிமுக) உள்ளார். இவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் நாளை குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: