பத்ம விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு இடம்: ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: பத்ம விருது பட்டியலில் நாடு முழுவதும் இருந்து இடம்பெற்றுள்ள 128 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம்பெற்றிருப்பதும் பாராட்டுக்குரியது. சமீபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் (பத்ம விபூஷண்), கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (பத்ம பூஷண்), கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (பத்ம ஸ்ரீ), மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா (பத்ம பூஷண்), டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் (பத்ம விபூஷண்), பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (பத்ம ஸ்ரீ), கிளாரினெட் இசைக் கலைஞர் ஏகேசி நடராஜன் (பத்ம ஸ்ரீ), சதிர் நடனக்கலைஞர் முத்து கண்ணம்மாள் (பத்ம ஸ்ரீ) உள்ளிட்ட பத்ம விருதுகள் பெறும் அனைவரும் தாங்கள் சார்ந்த துறையில் மிகச்சிறந்து விளங்கியவர்கள். பத்ம விருது பெறும் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் அனைவரும் தங்கள் துறையில் மென்மேலும் சிறந்து விளங்கி பல்வேறு விருதுகளைப் பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.

Related Stories: