ரூ.5 லட்சம் கடனை அடைக்க கொள்ளையனாக மாறிய மாநகராட்சி ஊழியர்

சென்னை: சேத்துப்பட்டு 16வது அவென்யூவில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் பணம் எடுப்பதுபோல் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு ராடால் உடைத்தார். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். போலீசார் வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் அவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி பதிவு மூலம் இதுதொடர்பாக அன்னை சத்தியா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார்(28) என்பவரை பிடித்தனர். விசாரணையில், இவர் சென்னை மாநகராட்சி 9வது மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவது தெரியவந்தது.

மேலும், தனக்கு ரூ.5 லட்சம் கடன் இருந்த நிலையில், தனது மனைவியுடன் குடித்தனம் செல்ல தனது மாமியார் தொடர்ந்து வலிறுத்தினார். இதனால் பணம் தேவைப்பட்டது. பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. எனவே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் கடனை கட்டிவிட்டு தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: